Type Here to Get Search Results !

தேனியில் 18 வருடங்களாக ஆண்டு விழாவை குடும்ப விழாவை கொண்டாடும் சிறு வியாபாரிகள் சங்கத்தினர்

 

தேனியில் 18 வருடங்களாக ஆண்டு விழாவை குடும்ப விழாவை கொண்டாடும் சிறு வியாபாரிகள் சங்கத்தினர்



தேனியில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் தேனி மாவட்ட சிறு பலசரக்கு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின்  திருமண மண்டபத்தில் ஆண்டுதோறும் தேனி மாவட்ட சிறு பலசரக்கு வியாபாரிகளின் சங்கத்தின் சார்பில் ஆண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம் .

கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட ஆண்டு விழாவில் இந்த சங்கத்தின் சார்பில் 18 ஆம் ஆண்டு ஆண்டு விழா மற்றும் தேனி மாவட்ட சிறு வியாபாரிகளின் சங்கத்தின் சார்பில் குடும்ப விழா நடைபெற்றது


தேனி மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை எதிர்கொண்டு 50 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.  மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் வளர்ச்சியினை மேற்கொள்ளும் வகையில் முதல் இடம் பிடித்த பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கும் பரிசுத்தொகை மற்றும் ஊக்கத் தொகை  வழங்கப்பட்டது .





மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் திறன் பயிற்சினை மேற்கொள்ளும் வகையில் கவிதை போட்டி, பேச்சுப் போட்டி, நீயா நானா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் போட்டி ஆகியவை நடைபெற்றன அதே போல் சிறு வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக மகிழ்ச்சி பொங்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன .

இந்த விளையாட்டுப் போட்டிகளில் கண்கட்டி போட்டி, லக்கி கேன்,  மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது

மேலும் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட சிறு பல சரக்கு வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் ராமராஜ், பொருளாளர் அரோக்கியபிச்சை, துணை செயலாளர் ராஜபாண்டி, ஆலோசகர் நவநீதகிருஷ்ணன் மற்றும் மாவட்ட வட்டார சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள், உறுப்பினர்களின் பெற்றோர்கள், குடும்பத்தார்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.