தேனி அன்னஞ்சியில் உள்ள தனியார் திருமண மஹாலில் லியோ கோசு ரியு கராத்தே நிறுவனம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது
தேனி மாவட்டம் தேனி அன்னஞ்சியில் உள்ள தனியார் திருமண மஹாலில் லியோ கோச் ரியூ கராத்தே நிறுவனம் சார்பில் 7வது மாநில கராத்தே போட்டி தமிழ்நாடு கராத்தே சங்க மாநில தலைவர் ஈஸ்வரகுமார் தலைமையிலும் வைகை அரிமா சங்க தேனி மாவட்டதலைவர் ராஜேஸ் கண்ணா முன்னிலையிலும் நடைபெற்றது
இந்த கராத்தே போட்டி 6வயது முதல் 21வயது வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கான எடை மற்றும் உயர அடிபடையில் இருவிதமான கராத்தே போட்டிகளானகட்டா என்ற தனித்துவ போட்டியும் குமிட்டை என்ற சண்டை போட்டியும் நடைபெற்றது
இந்த கராத்தே போட்டியில் தேனி மதுரை திண்டுக்கல் காஞ்சிபுரம் கடலூர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 400மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மஞ்சள் பச்சை வெள்ளை கருப்பு நிற பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கபட்டது
மதுரையை சார்ந்த ராமமூர்த்தி தலைமை நடுவராகவும் செயல்பட்டார்
கராத்தே போட்டி ஏற்பாடுகளை லியோ கோச் ரியூ கராத்தே நிறுவன தலைவர் லியோ முத்தையா போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தார்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி