மகளிர் உரிமை தொகையில் உங்கள் பெயர் உள்ளதா? 1.27 லட்சம் பேர் நீக்கமா?எப்படி தெரிந்து கொள்வது?
மத்திய மாநில அரசு சார்பில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இதேபோல் மகளிருக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள மகளிர்களுக்கு பல்வேறு விதிகளின்படி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .அதன் அடிப்படையில் தமிழக முழுதும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
தமிழக அரசு கூறிய விதிகளின்படி மகளிர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் ஒரு கோடியே 16 லட்சத்துக்கு மேற்பட்ட மகளிர் பயன்பட்டு வருகின்றனர்.
மேலும் தற்பொழுது இதுவரை கிடைக்காத பெண்களும் புதிதாக திருமணம் செய்த பெண்களும் விண்ணப்பம் அளித்து வரும் நிலையில்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேலும் பல்வேறு விதிமுறைகளை தளர்த்தப்பட்டு சுலபமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் செயல் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது
மேலும் இதுவரை மகளிர் உதவித்தொகை வாங்கி வந்து அரசு விதிகளின்படி இல்லாத மகளிர் சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அரசு பணிகளில் சேர்ந்தவர்கள், அதிக நிலம் உள்ளவர்கள் ,உயிரிழந்த நபர்கள் உட்பட பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது
மத்திய மாநில அரசு ஊழியர்கள் ,கூட்டுறவு அமைப்புகளின்ஊழியர்கள் ,சொந்த பயன்பாட்டுக்காக கார் ஜீப் வேன் உன்னிட்ட கனரக , நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் என அரசு அறிவித்துள்ள தகவலின் படி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் உங்களுடைய பெயர் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பாட்டில் உள்ளதா இல்லையா என்பதனை கீழ்காணும் இணையதளம் முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காகவே
https://kmut.tn.gov.in/login.html
என்ற இணையதளம் முகவரி அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த இணையதளம் முகவரிக்கு சென்று லாகின் செய்து ஆதார் எண்ணை உள்ளிட்டு ஓடிபி அனுப்பவும் என்ற பட்டனை அனுப்ப வேண்டும் தொடர்ந்து ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு புதிய ஓட்டி பி வரும் அந்த ஓடிப்பினை உள்ளீடு செய்து கேப்ச கோட்டினை உள்ளீடு செய்யவும்
தொடர்ந்து உங்களுடைய விண்ணப்பம் பயனாளி நிலை குறித்து இதில் வரும்
இ சேவை மையங்களுக்கு சென்றும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி