மாம்பழங்கள் எத்தனை வகை? அதை எப்படி கண்டுபிடிப்பது
தமிழகத்தில் கொய்யா பழம் வாழைப்பழம் திராட்சை சாத்துக்குடி சப்போட்டா என பல வகையான பழ வகைகள் விளைந்து அதை நாம் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் ஒவ்வொரு பல வகைகளும் ஒவ்வொரு சத்துக்களும் ஊட்டச்சத்துக்களும் சுவையும் அடங்கியுள்ளன. அதேபோல் பழங்களை பார்த்தவுடன் எச்சில் ஊறும் அளவுக்கு இருப்பது மாம்பழம் தான். இந்த மாம்பழங்களின் வகைகளில் ஒவ்வொரு பகுதிகளும் ஒவ்வொரு வகை மாம்பழங்கள் உருவாகி விளைச்சல் தருகின்றன .இந்த மாம்பழங்களில் எத்தனை வகை உள்ளன என்றும் ,அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றியும் இந்த கட்டுரையில் நாம் காணலாம்
மாம்பழம் நமக்கு அதிக நன்மைகள் தரும் நிலையில் ரசாயன முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்களால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த ரசாய ரீதியான மாம்பழங்களை எவ்வாறு சுலபமான முறையில் கண்டுபிடிக்கலாம் என்பதை பற்றி முதலில் காண்போம்
ரசாயன முறையில் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் அனைத்தும் ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில் பச்சை நிறங்கள் காணப்படும் .அதே நேரத்தில் இயற்கையாகவே பழுத்த பழங்கள் அனைத்தும் ஒரே சீராக காணப்படும்.
முதலில் ஒரு பக்கெட் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் மாம்பழங்களை கொட்டினால் மிதந்து கொண்டே இருந்தால் அவை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கங்கள் ஆகும். ஆனால் இயக்கிய முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அனைத்தும் தண்ணீரின் உள்ளே இருக்கும் .
மாம்பழத்தின் சதை கெட்டியாக இருந்தால் அவை செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களாக கருதப்படுகிறது அதேபோல் கொழு கொழு என்று இருந்தால் அதை இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் என அறியப்படுகிறது
மல்கோவா மாம்பழம்
மல்கோவா மாம்பழம் நடிகர் விஜய் படத்தில் மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் என்ற பாடல் அமைந்துள்ளது அந்த அளவுக்கு மாம்பழத்தின் மிக சுவையாக இருப்பது மல்கோவா மாம்பழம் ஆகும் இனிப்பும் நறுமணமும் கொண்ட இந்த மல்கோவா மாம்பழம் ஆனது ஓவல் வடிவத்தில் காணப்படும் தமிழகத்தில் ஒரு சில பகுதியில் மட்டும் இந்த மல்கோவா மாம்பழம் விளைச்சல் தருகின்றன
அல்போன்சா மாம்பழங்கள்
அல்போன்சா மாம்பழங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் காணப்படும் மாம்பழங்கள் ஆகும் .மேலும் இந்த அல்போன்சா மாம்பழம் சுவை அதிகமாக இருக்கும் அதிகம் நீர் சத்து அதிகமாக இருக்கும் ஓவல் வடிவத்துடன் காணப்படும் இந்த மாம்பழம் ஆனது மாம்பழங்களின் ராஜா எனவும் அனைவராலும் அழைக்கப்படுகிறது இதனுடைய கலர் ஆனது சிவப்பு நிறத்துடன் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்துடன் காணப்படும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை உள்ள மாதங்களில் இந்த அல்போன்சா மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன
இமாம் பசந்த் மாம்பழம் மாம்பழ வகைகளில் மற்றொரு வகை இமாம் பசந்த் மாம்பழமாகும் சுவையும் மனமும் கொண்ட இந்த இமாம் மாம்பழமானது ஓவல் வடிவத்தில் காணப்படும்
செந்தூர் மாம்பழம்
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படுவது இந்த செந்தூர் மாம்பழங்களாகும் . சிறிய அளவில் காணப்படும் இந்த செந்தூர் மாம்பழங்கள் தனி சுவை கொண்டதும் ஜூசி இனிப்பு சுவை கொண்டதாகும்
கிளி மூக்கு மாம்பழம்
தமிழகத்தின் வட மாவட்டங்களான சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளிமூக்கு மாம்பழங்கள் தான் அதிக அளவு விளைவிக்கப்படுகின்றன இந்த கிளி மூக்கு மாம்பழங்கள் அனைத்தும் சிறிய அளவில் இருக்கும் மேலும் அதிக சுவையும் கொண்ட இந்த மாம்பழங்கள் பழுத்த பிறகு தான் அதிக சுவை கொண்டதாக இருக்கும் மேலும் பழுக்கும் நேரத்தில் சாப்பிட்டால் அவை அதிகமாக கசப்பு தன்மையைக் கொண்டதாக இருக்கும் இந்த மாம்பழம்
பங்கனபள்ளி மாம்பழம் தமிழகத்திலும் ஆந்திர மாநிலத்திலும் அதிகம் விளைவிக்கக் கூடிய மிக மிக முக்கிய மாம்பழ வகைகளில் விளங்கும் மாம்பழமாக பங்கன பள்ளி மாம்பழம் திகழ்கிறது. நீல வட்ட வடிவில் காணப்படும் இந்த மாம்பழம் இனிமையான சுவை கொண்ட மாம்பழமாகும்
நீலம் மாம்பழம் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் அதிகமாக விளைவிக்கப்படும் இந்த நீலம் மாம்பழமானது நீல வட்ட வடிவில் காணப்படும் மேலும் இந்த மாம்பழம் நார்ச்சத்து இல்லாமல் சதை பற்றுடன் அதிக சுவை கொண்ட மாம்பழம் ஆகும்
மாம்பழங்களில் பல்வேறு வகைகள் இருந்தாலும் கூட நாம் மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பாக நன்றாக தண்ணீரில் அலசி சாப்பிடுவதினால் நன்மைகள் உள்ளன இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை சதையுடன் சாப்பிடலாம் அதே நேரத்தில் இதை தெரியாமல் நம் சாப்பிடும் பொழுது சதையை எடுத்து விட்டு சாப்பிட்டால் நன்மை இருக்கும் இயற்கையாக விளைவிற்கப்படும் மாம்பழங்களை கண்டுபிடித்து இயற்கை மாம்பழங்களை உண்டு வந்தால் நமது உடம்புக்கும் கேடு விளைவிக்காது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி