பழங்களில் ஸ்டிக்கர் (எண்கள்) குறியீடு ஒட்டுவதற்கு எதற்காக?
மனிதனுக்கு அடிப்படை ஊட்டச்சத்து கிடைப்பது கீரை வகைகள், தானிய வகைகள் ,காய்கறிகள், பழங்களில் கிடைக்கின்றன .மேலும் தற்பொழுது மாமிச வகையிலும் பல்வேறு சத்துக்கள் கிடைப்பதனால் அதிகமாக மாமிசங்களையும் தற்போது மனிதர்கள் உண்டு மகிழ்ந்து வருகின்றனர். சுவைக்காகவும் ஊட்டச்சத்துக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த மாமிசங்களால் பல்வேறு தீமைகளும் உள்ளன. ஆனால் காய்கறிகள் பழ வகைகள், தானிய வகைகள் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களின் மூலம் எவ்வித தீங்கும் இல்லாமல் இன்று வரை இருந்து வருகின்றது தானிய வகைகளில் அதிக சத்துக்கள் இருந்தாலும் கூட பழ வகைகள் தான் அதிக சுவை தருகின்றன அந்த வகையில் பழவகைகளில் நாம் முதலில் நினைவுக்கு வருவது ஆப்பிள் . சுவையும் சத்துக்கள் அதிகமாக நிறைந்திருப்பதால் நாம் அதிக அளவு ஆப்பிள் பழத்தை விரும்பி சாப்பிட்டு வருகின்றோம்.
கடந்த காலங்களில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆப்பிள் பழங்கள் அனைத்தும் தற்பொழுது ஆங்காங்கே செயற்கை முறையிலும் பழுக்க வைக்கப்பட்டு வருகிறது .மேலும் தற்போது ஆப்பிள் பழங்கள் விற்கும் கடைகளில் ஆப்பிள்பழங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அந்த ஸ்டிக்கர் எதுக்காக ஒட்டப்பட்டு வருகிறது என்பதை இதில் காணலாம்.
ஆப்பிள் பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப் படுவதில் காணும்போது அதில் இருக்கும் எண்களை தகுந்தாற்போல் ஆப்பிள் பழத்தின் தரத்தையும் உறுதி செய்யப்படுகிறது .ஆப்பிள் பழத்தில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களுக்கு பி எல் யூ என்று கூறுவார்கள்.
இந்த பி எல் நியூ எண்களை அறிந்த பின்பு அவை இயற்கை முறையில் வளர்க்கப்பட்டத, செயற்கை முறையில் பழுக்கப்பட்டத , மரபணு மாற்றங்கள் மூலம் வளர்க்கப்பட்டத என்பதனை இந்த ஸ்டிக்கரில் உள்ள எண்களை வைத்து கண்டுபிடிக்கலம்.
இந்த PLU கோடானது 1990 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிள் பழங்களின் PLU கோடு எண்ணில் 4011 என்ற எண்ணில் நான்கு என்று தொடங்கினால் அவை முழுக்க முழுக்க வேதிப்பொருளால் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் பழங்கள் என்று அறியப்படுகிறது
அதேபோல் பிஎல்யூ கோடின் ஐந்து இலக்க எண்களின் 84011என்று ஆரம்பித்தால் அவை மரபணு மாற்றம் செய்யப்பட்ட இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட ஆப்பிள் பழங்களாகும்.
மேலும் பிஎல்யூ கோடில் ஐந்து இலக்கங்களில் எண்கள் ஆரம்பித்து ஒன்பது என்ற எண் இருந்தால் ( 94101) அவை இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட ஆப்பிள் பழங்கள் ஆகும்
ஆப்பிள் பழங்களை வாங்கும் பொழுது நாம் அனைவரும் மேற்கண்ட வழிமுறைகள் பின்பற்றி இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் பழங்களை நாம் உண்டு மகிழலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி