பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்ப விண்ணப்ப பதிவு தொடங்கியது
தமிழ்நாடு கல்வித்துறையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது புதிய அறிவிப்பினை வெளியிட்டது மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கும் பொழுது தற்காலிக பணியாளர்கள் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர் .தமிழக கல்வித்துறை சார்பில் தமிழ்-394 , கணிதம் 233 ,ஆங்கிலம் 252 ,இயற்பியல் 292 , உட்பட மொத்தம் 2222 இடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது .
அதன் அடிப்படையில் நவம்பர் 1 தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் கடைசி தேதியாக நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் ,ஜனவரி மாதம் ஏழாம் தேதி தேர்வு நடைபெறும் என்றும், மேலும் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்கும் நபர்கள் கண்டிப்பாக ஆசிரியர் கல்வி தேர்வு தாள் இரண்டில் தகுதி பெற்றவர்கள் மட்டுமேஇந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகள் என்றால் மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்றும் ,அதேபோல் தமிழ் வழி கல்வியில் படித்தவர்கள் அதற்கான விண்ணப்பங்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதேபோல் இந்த பணியிடங்களுக்கு தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்றால் www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்றுவிண்ணப்பிக்கலாம் என்றும்,மேலும்இந்தப்பணியிடங்கள் குறித்து சந்தேகங்கள் இருந்தால்1800 425 6753 என்றதொலைபேசி எண்ணில் சந்தேகங்களை கேட்டரிந்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி