எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி ஒன்றிய அளவிலான குழுக்கள் ஏற்பாடு முழு விபரம்
மத்திய மாநில அரசுகள் சார்பில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு செயல்பாடுகளையும் செயல் திட்டங்களையும் தீட்டி வருகிறது மேலும் பல்வேறு சிறப்பு தேர்வுகளும் சிறப்பு செயல்பாடுகளையும் செயல்படுத்தி வரும் நிலையில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் மூலம் எங்கள் பள்ளி மிளிரும்பள்ளி என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து சுகாதாரம் சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு துறை,ஊரக வளர்ச்சி ,பொதுப்பணித்துறை ,மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு சார்பில் உள்ள உறுப்பினர்கள் , தன்னார்வ தொண்டு அமைப்பு நிர்வாகிகள் உட்பட பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தில் செயல்பாடுகள் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் பள்ளி வளாகங்கள் அனைத்தும் சுத்தமாக வைத்திருத்தல் இயற்கை சூழல் கூடிய மரங்களை நடுதல் பள்ளி வளாகங்களில் காய்கறிகள் தோட்டம் அமைத்து அதன் மூலம் வரும் காய்கறிகளை உணவாக சமைத்து பள்ளி மாணவர்களுக்கு கொடுத்தால் உட்பட பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.அதேபோல் இந்த திட்டத்தை நன்றாக செயல்படுத்தும் விதமாக துணை குழுக்களில் மாணவர்கள் கொண்டு ஏற்படுத்தி மிக சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது .மேலும் விபரங்களை அறிய கீழ்க்காணும் pdf வடிவிலான இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி