Type Here to Get Search Results !

விலை இல்லா காலணிகள் அளவு எடுக்கும் பணியில் இல்லம் தேடி தன்னார்வலர்கள்

விலை இல்லா காலணிகள் அளவு எடுக்கும் பணியில்  இல்லம் தேடி தன்னார்வலர்கள்


 

தமிழக அரசு சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது .மேலும் பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் நலத்திட்டங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலணிகளும்  ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலேந்திகள் (  Shoes) வழங்கப்பட்டு வருகின்றன .


இதுவரை வழங்கப்பட்டு வரும் காலனிகள் மற்றும் காலேந்திகள்  அனைத்தும் மாணவர்களுக்கு சரியான முறையில் பொருந்தாத நிலையில் இருந்த நிலையில் இந்த வருடம் வழங்கப்படும் காலணிகள் காலேந்திகள் அனைத்தும் மாணவர்களுக்கு சரியான முறையில் பொருந்தும் வகையில் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் காலின் அளவுகளை பார்ப்பதற்காக புதிய நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது அதாவது மாணவர்களின் கால்களுக்கு காலணிகள் காலேந்திகள்  சரியாக பொருந்தும் வகையில் அளவு எடுப்பதற்காக தற்போது தமிழக அரசு சார்பில் தேர்வு செய்ப்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்  பயன்படுத்த வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களின் கால் அளவுகளை எடுப்பதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு கீழ் இருக்கும் தன்னார்வர்களை பயன்படுத்தி அளவுகளை துல்லியமாக எடுத்து அதன் விவரங்களின்படி விலையில்லா நலத்திட்ட பொருட்கள் மற்றும் காலணிகள் வழங்குவதற்கு அறிவுரைகள்  வழங்கப்பட்ட வருகிறது. இதற்கான அறிவிப்பினை  பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து விரிவான தகவல்களை பெற கீழ்க்கணும் பிடிஎப் வடிவிலான இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன் பெறலாம்

https://drive.google.com/file/d/1Q5fO9AiBltyg_6G6dLkUCRVStCXqMdbE/view?usp=drivesdk

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.