நடிகை மனோரமாவின் ஒரே மகன் இன்று காலமானார்
தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நடிகர்களாக பல்வேறு நடிகர்கள் இருந்த நிலையில் நடிகைகளில் மனோரமா அசைக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வந்துள்ளார் .நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் என பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் தமிழ் திரைப்பட உலகில் அசைக்க முடியாத நடிகையாக நடிகை மனோரமா திகழ்ந்து வந்தார் .மேலும் நடிகை மனோரமாவை ஆச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன் காலமானார் .மேலும் மனோரமா காலமான நிலையிலும் தற்பொழுது வரை மனோரமாவை தமிழ் சினிமா மறக்காமல் இன்றுவரை இருந்து வருகிறது.
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
பல்வேறு வேடங்களில் நடித்து புகழ் பெற்று வந்த மனோரமாவுக்கு ஒரே மகனும் பூபதி என்பவர் இன்று காலை உயிரிழந்தார்.
நடிகர் விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் என்ற திரைப்படத்தில் பூபதி நடித்துள்ளார் பின்பு திரைப்படங்களின் நடிப்பதை நிறுத்திவிட்ட நிலையில் இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் ராஜ ராஜன் என்ற மகனும் ,அபிராமி, மீனாட்சி ஆகிய இரு மகள்களும் உள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.தற்பொழுது பூபதிக்கு 70 வயது ஆகும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளார் .
இந்நிலையில் இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்து உள்ளார் .கடந்த 2015 ஆம் ஆண்டு ஆச்சி மனோரமா உயிரிழந்த நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவருடைய மகன் பூபதி இன்று உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய மறைவிற்கு திரை உலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்தும் நேரடியாக சென்று மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்







தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி