ஆண்டிபட்டி அருகேமாவூற்று வேலப்பர் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை
தேனி மாவட்டம்ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி பகுதியில் உள்ள மாவூற்று வேலப்பர் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டி அருகே அமைந்துள்ள மாவூற்று வேலப்பர் திருக்கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மாவூற்று வேலவருக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. சந்தன காப்பு அலங்காரத்துடன் மாவூற்று வேலவருக்கு நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர் .பக்கர்கள் மொட்டை அடித்தும் , பால் குடம் எடுத்தும் தங்களது காணிக்கைகளை செலுத்தினர்கள் .
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த இந்த சிறப்பு பூஜையில் பக்தர்களின் வசதிக்காக அரசு சார்பில் போக்குவரத்து வசதியும், காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த தைப்பூச திருவிழாவின் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை யின் மாவூற்று வேலப்பர் திருக்கோவில் செயல் அலுவலர் நதியா தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர் கருப்பசாமி கோவிலிலும் சிறப்பு பூஜையில் பக்தர்கள் வரிசை நின்று சுவாமி தரிசனம்
இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருக்கோவிலிக்கு வருகை புரிந்த பக்தர்கள் சுனைநீரில் குளித்து சுவாமி தரிசனம் செய்தனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி