ஆவின் பால் கடை வைக்க விரும்புமா இது உங்களுக்கான அறிவிப்பு தான்
பத்து ரூபாய் சம்பளமானாலும் அரசு வேலை செய்யும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் நினைத்துக் கொண்டு உள்ளார்கள். ஏனென்றால் அரசு வேலை என்றால் வருடந்தோறும் சம்பளம் உயர்வு உட்பட பல்வேறு சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதால் அனைவரும் அரசு வேலையில் சேர வேண்டும் எண்ணத்தில் அனைவரும் உள்ளனர். அரசு வேலையில் சேர்ந்து மாடி வீடு கட்டி வாழ்ந்து வரும் நபர்களுக்கு இணையாக சொந்தத் தொழில் செய்து வாழ்வில் முன்னேற்றம் அடைந்த இளைஞர்கள் ஏராளமானோர் இருந்து வருகின்றனர்
சொந்தத் தொழில் செய்வதனால் அதிக லாபமும் அதிக வருமானமும் கிடைக்கின்றன. இதற்காக அரசு சார்பில் சொந்தத் தொழில் செய்யும் இளைஞர்களின் வசதிக்காக தொழில்கடனும் வழங்கி வருகிறது. தானாக சொந்த தொழில் செய்து முன்னேறியவர்களும், அரசு சார்ந்த நிறுவனங்களில் தொழில் முனைவராக பணியாற்றி முன்னேறிய இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர் . அந்த வகையில் அரசு சார்பில் உள்ள நிறுவனங்களில் தொழில் முனைவோராக பணியாற்றுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்
ஆவின் நிறுவனம் சார்பில் தற்பொழுது இளைஞர்களுக்கு தொழில் முனைவோராக மாற்றும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது .அதே போல் தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாக தற்பொழுது ஆவின் நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
வணிக விற்பனையாளர் ,மொத்த விற்பனையாளர், டீலர் ஆகிய பிரிவுகளுக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு சென்று அதில் பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்ப்பகுதியில் உள்ள விலாசத்திற்கு அனுப்பி வைத்து பயன் பெறலாம் .
விரிவான தகவல்களுக்கு மற்றும் விண்ணப்பபடிவம்
வணிக விற்பனையாளர் ,மொத்த விற்பனையாளர், டீலர் ஆகியவற்றிக்கான விண்ணப்படிவங்கள்
https://drive.google.com/file/d/17_W-l1wJWX0xe7gqB_hVum6PEY64RJkP/view?usp=drivesdk
https://drive.google.com/file/d/17YrC6vrp9E_YHvefEXYS4L33jVGgtmBH/view?usp=drivesdk
டீலர் விற்பனையாளர்
https://drive.google.com/file/d/17hnmJSPRPO-QEsuhMt7WqxGOwWKxD01L/view?usp=drivesdk
முகவரி
TCMPF LTD
Aavin illam
3a Pasumponmuththuramalinganar, Salai, Nandanam ,Chennai 600035
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி