Type Here to Get Search Results !

ஜெயிலர் படம் வெளியீடு உற்சாக வெள்ளத்தில் ரஜினி ரசிகர்கள்

ஜெயிலர் படம் வெளியீடு உற்சாக வெள்ளத்தில் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் .இவர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் நடிகர் ரஜினிகாந்திற்கு 169 வது படமாகும் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தமன்னா ,ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு கன்னட நடிகர் சிவராஜ் குமார், மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர் .மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மத்தில்  உற்சாக வெள்ளத்தில் மிதற்பதற்காக  10 8 2003 புதன்கிழமை ஜெயிலர் படம் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது .மேலும் தமிழகமெங்கும் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு காலை முதல் காட்சியாக 9 மணிக்கு மேல் திரையிடப்பட்டது

நடிகர் ரஜினிகாந்திற்கு  தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், ஜப்பானிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர் .இந்த திரைப்படத்தை காண்பதற்காக ஜப்பானிலிருந்து சென்னை காசி தியேட்டருக்கு ஜப்பானியர் ரசிகர்கள் ஏராளமான வருகை புரிந்து திரைப்படத்தினை கண்டுபிடித்தனர் இதேபோல் தமிழக முழுவதும் சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தினை கான ஏராளமான ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று திரைப்படத்தை காண்பதற்காக சென்றுள்ளனர். இதே போல் ரஜினி ரசிகர்கள் சார்பில் ஜெயிலர் திரைப்படத்தினை வரவேற்கும் வகையில் பல்வேறு     இடங்களில்  பால் அபிஷேகம், அன்னதானம், உட்பட    பல்வேறு நிகழ்ச்சிகள்  நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் தேனீ மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்படத்திற்காக ரஜினி ரசிகர் மத்தியில்  பெரும் வரவேற்பினை பெற்று   உள்ளது.    இந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக தேனி பழனிசெட்டி பெட்டியில் உள்ள வெற்றி சினிமாஸ் திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் ஜெயிலர் படத்தை வரவேற்கும் விதமாகவும், நடிகர் ரஜினிகாந்திற்கு  169 படமாக இருக்கும் நிலையில் , ஜெயிலர் திரைப்படத்தினை போல் ரஜினிகாந்தின் உருவம் போல் கேக் தயாரித்து அந்த கேக்கினை  ரசிகர்கள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்

மேலும் ரசிகர்கள் மத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜெயிலர்  என்ற நிலை ஏற்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.