வீட்டில் வைக்கக் கூடாத கடவுள் படங்கள்
நம் ஒருவர் வீட்டில் நுழையும் பொழுதும் சரி வீட்டுக்குள்ளும் சரி கடவுள் படங்கள் இல்லாத வீடு இல்லை என்று சொல்லலாம். சின்ன வீடுகளாக இருந்தாலும் சரி பெரிய மாடி வீடுகள் இருந்தாலும் சரி கடவுளின் படங்கள் எண்ணற்றவையாக இருக்கும்பொழுது இந்தக் கடவுள் படங்களில் எந்தெந்த படங்கள் வீட்டில் இருக்கலாம் எந்தெந்த படங்களை வைக்க கூடாது என்பதனை பற்றி இந்த கட்டுரையின் மூலம் ஆன்மீக சான்றோர்களின் கூற்றுப்படி நாம் அறிந்து கொள்ளலாம்
மேலும் நம்முடைய வீட்டில் உள்ள பூஜை அறையிலும் வீட்டிலும் பல்வேறு சுவாமி படங்கள் இருந்தாலும் கூட ஒரு சில கடவுளின் படங்கள் நேர் எதிர் விதமாக இருக்கும் படங்களாக கருதப்படுகிறது
ருத்ரா வடிவிலான கடவுள் படங்களை நாம் வீட்டில் வைத்திருக்கக் கூடாது
ஆக்ரோஷமான படங்களை வீட்டில் கண்டிப்பாக வைத்திருக்கக் கூடாது. அதாவது எதிரிகளை அழிப்பது போன்ற படங்களையும் ஆக்ரோஷமான படங்களையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது
ஒரே வடிவமான படங்களை ஒரே இடத்திலும் அருகே அருகேயும், எதிர் திசையிலும் வைக்க கூடாது,
ராவணன் துர்க்கை உள்ளிட்ட படங்களும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது
உடைந்த தெய்வ சிலைகள் கிழிந்த படங்களை கண்டிப்பாக வீட்டில் வைத்திருக்கக் கூடாது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி