Type Here to Get Search Results !

ஜெயிலர் படம் வெளியீடு ரசிகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுமா

 ஜெயிலர் படம் வெளியீடு ரசிகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இந்தத் திரைப்படம் வருகின்ற 10 தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படமானது சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வெளியிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படம் வருகின்ற 10 தேதி அன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில் காலை காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் காலை 9 மணிக்கு பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் முதல் காட்சி திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 ரஜினிகாந்த் படம் என்றாலே அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் ரஜினி  ரசிகர்களிடையே ஜெயிலர் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை பெற்றுள்ளது இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ஜெயிலராக  நடித்துள்ளார்.மேலும் ஜெயிலர்  படம் டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது என்றும் தற்பொழுது கடந்த ரஜினிகாந்த் படத்தை விட அதிக அளவில் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் இந்த படத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லால் ,கன்னட திரைப்படத்தின் நடிகர் சிவராஜ்குமார், நடிகைகள் தமன்னா பிரியங்கா மேனன், ரம்யாகிருஷ்ணன் ஆகியோருடன்  யோகி பாபு ,விநாயகம் ரவி மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளனர் மேலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் படம் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.