Type Here to Get Search Results !

வாழைப்பழத்தை விட வாழைக்காய் தான் சிறந்தது எதற்காக தெரியுமா

 வாழைப்பழத்தை விட வாழைக்காய் தான் சிறந்தது எதற்காக தெரியுமா


பூஜை செய்வதற்கும் சிறந்த செரிமான பொருளாகவும் கருதப்படுவது வாழைப்பழங்கள் தான். இந்த வாழைமரங்களில் உருவாகும் அனைத்து பொருட்களும் நன்மை தரும் பொருளாகவே உள்ளன. மேலும் வாழை மரங்களில் இலை முதல் காய் வரை பூக்கள் வரை அனைத்து பகுதிகளும் மருந்தாக பயன்பெற்று வருகிறது. மேலும் வாழையிலை வாழைத்தண்டு வாழைப்பூக்கள் வாழைக்காய் வாழைப்பழம் என்று வாழை மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நன்மைகள் தருகின்றன.


மேலும் வாழைத்தண்டு வாழைப்பூக்கள் வாழை இலை ஆகியவை தனித்தனி பாகங்களாக உள்ள நிலையில் வாழைக்காய் வாழைப்பழம் ஆகியவை இரண்டும் ஒரே பகுதியில் இருந்து வருகிறது.வாழைக்காய் நல்லதா அல்லது வாழைப்பழம் நல்லதா என்பதை பற்றி இங்கு காணலாம்.

வாழையில் வாழைக்காயாக இருக்கும் பொழுது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்றும்/ பழுத்த பலமாக மாறும்பொழுது அதில் ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும் கூறப்படுகிறது .மேலும் வாழைப்பழத்தினை அப்படியே சாப்பிடும் பொழுது அதில் அனைத்து சத்துக்களும் உள்ளன என்றும் ,வாழைகாயினை பொறியல் பஜ்ஜி போன்ற ஒரு மாற்றம் செய்து சாப்பிடுவதனால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்து காணப்படாமல் அப்படியே அந்த சத்துக்கள் அனைத்தும் உள்ளது என்றும் கூறப்படுகிறது. வாழைக்காயில்  அதிக சத்துக்கள் உள்ளன என்றும் அது நன்கு கனிந்து விட்டால் சத்துக்கள் குறைபாடு உள்ளது என்றும் கூறப்படுகிறது

வாழைக்காயின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்


வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆண்டி ஆச்சிடென்ட் அதிகமாக உள்ளதால் ஜீரண மண்டலத்துறை சரியாக செயல்படும் ஒரு பொருளாக வாழைக்காய் பயன்படுகிறது .புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துகிறது. நன்கு பழுத்த வாழைப்பழங்களை விட சிறிதாக பழுத்த  வாழைக்காய் பழத்தில் இனிப்பு குறைவாக இருக்கும். அதனால் அந்த வாழைக்காய் பழத்தினை சாப்பிடுவதினால் அதிக எதிர்ப்பு திறன் உள்ளது என்றும் ,மாவு சத்தும் அதிகமாக உள்ளது என்றும், இதனால் சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது என்றும் ,நீரிழிவு நோயாளிகள் இந்த வாழைக்காய் பழத்தினை சாப்பிடலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதய நோய்களுக்கு இந்த வாழைக்காய் பெரும்பாலும் பயன்படுகிறது. வாழைக்காய் தினசரி சாப்பிட்டு வருவதால் உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது.  மேலும் வாழைக்காயை  தொடர்ச்சியாக சாப்பிடும் பொழுது போதிய பலம் எலும்புகளுக்கு கிடைக்கிறது. இதனால் மூட்டு வலி உட்பட பல்வேறு நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது .எனவே வாழைக்காய் நன்றாக பழுப்பதற்கு முன் சாப்பிடுவது மிகவும் நல்லது என்றும் நன்றாக பழுத்த பழங்கள் சாப்பிடுவதனால் குறைந்த அளவில் நன்மைகள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.