பள்ளி , கல்லூரி மாணவர்கள் ஓவியர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் அறிவிப்பு
மத்திய மாநில அரசு சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி விளையாட்டு வேலை வாய்ப்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்குவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பிலும் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு பல்வேறு செயல் திட்டங்களையும் பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகின்றனர்
இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை மற்றும்தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து சங்க இலக்கிய ஓவியப் போட்டி நடைபெற உள்ளது இதில் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் ஓவியர்கள் என அனைவரும் பங்கேற்கலாம் இந்த ஓவியப்போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் பரிசுகள் வழங்கப்படும் என்றும் மற்றவர்களுக்கும் என்னென்ன பரிசுகள் வழங்கப்படும் என்றும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை பற்றி இதில் காணலாம்
போட்டிக்கான ஏற்பாடு
தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைதுறை-தமிழ் இணைய கல்வி கழகம்
போட்டியின் பெயர்
சங்க இலக்கிய ஓவியப்போட்டி
யார் யார் பங்கு பெறலாம்
பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் ஓவிய ஆசிரியர்கள் பங்கேற்கலாம்
பரிசுத்தொகை
இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும் நபர்களில்
முதல் பரிசு பெறும் நபர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம்
இரண்டாம் பரிசு ரூ 15 ஆயிரம்
மூன்றாம் பரிசு ரூ 9 ஆயிரம் வழங்கப்படும்
மேலும் இந்த போட்டியில் பங்கேற்று தேர்ந்தெடுக்கப்படும் மற்ற நபர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 2000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் பதிவு செய்ய கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்யலாம்
www..tamilvu.org
பதிவு செய்ய கடைசி நாள் 27/11/2023
மேலும் இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் மற்ற ஓவியர்கள் ஆகியோருக்கு சந்தேகங்கள் இருந்தால் கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்
www..tamilvu.org
மேலும் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு அறியலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது
தொலைப்பேசி எண்: 8667822210
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி