மத்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள் 995 மாத ஊதியம் ரூ 44900 டூ ரூ 1.42 லட்சம் வரை
மத்திய அரசு சார்பில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அவ்வப்போது வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு காலிப்பணியிடங்களை நிரப்பபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு பணிகளில் சேர்வதற்கு பல்வேறு பயிற்சிகளும் முயற்சிகளும் மேற்கொள்ளும் இளைஞர்களின் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் விதமாக மத்திய உளவுத்துறை சார்பில் 995 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது .இந்த வேலை வாய்ப்புக்கு தகுந்தாற்போல் கல்வி மற்றும் பிற தகுதிகள் இருந்தால் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலையின் வகை
மத்திய அரசு உளவுத்துறை
வேலையின் பெயர்
மத்திய புலனாய்வுஅதிகாரி கிரேட் 2
எக்ஸிக்கியூட்டிவ்
(Assistant Central Intelligence officer Grade II Executive or ACIO Grade II Executive)
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 995
மாத ஊதியம்
மேற்காணும் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 44900
அதிகபட்சமாக ஒரு லட்சத்து42 ஆயிரம் ரூபாய்
கல்வி தகுதி
மேற்காணும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய மாநில அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்
வயதுவரம்பு குறைந்தபட்சம்
18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை
வயது தளர்வுகள்
ஓ பி சி பிரிவினருக்கு மூன்று வயது வரையும்
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஐந்து வயது வரையும் தளர்வுகள் உள்ளன என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு பயன்பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை
மேல் காணும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய உளவுத்துறை இணையதள முகவரியான mha.gov.in என்ற இணையதளம் முகவரிக்கு சென்று பார்வையிட்டு அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான முறையில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்காணும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களில்
பொதுப் பிரிவினர்
தேர்வு கட்டணம் 100 விண்ணப்ப கட்டணம் 450
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்து தேர்வு நேர்காணல் முறை என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கப்படும் முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி நவ 25
விண்ணப்பிக்க கடைசி நாள்
டிசம்பர் 15
என்ன நண்பர்களே மத்திய அரசின் உளவுத்துறை பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி