Type Here to Get Search Results !

விஜயகாந்திற்காக கதையை தேர்வு செய்த ரஜினிகாந்த்

 விஜயகாந்திற்காக  கதையை தேர்வு செய்த ரஜினிகாந்த்


தமிழ் சினிமா பட வரலாற்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிவாஜி கணேசன், கமலஹாசன் ,பிரபு முதல் தற்பொழுது உள்ள இளைய தலைமுறை நடிகர்கள் வரை நடித்து வந்துள்ளனர்.ஆனால் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்தது இல்லை. இந்த குறையை போக்கும் வகையில் நடிகர் விஜயகாந்திற்காக ரஜினிகாந்த் ஒரு கதையை தேர்வு செய்துள்ளார் .அது எந்த படம் என்பதை பற்றியும் அந்த திரைப்படத்தில் நடித்ததினால் புரட்சி கலைஞர் விஜயகாந்த் மூன்று முக்கிய சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன அந்த மூன்று நிகழ்வுகள் என்ன என்பதனை பற்றி இந்த கட்டுரைகள் காணலாம்


1980 , 1990 ஆம் வருடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமலஹாசன் போன்ற நடிகர்கள் உச்சத்தில் இருந்தார்கள் அந்த நேரத்தில் புதிதாக நடிகர் விஜயகாந்த் உருவாகினார் மேலும் கமலஹாசன் ரஜினிகாந்த் ஆகியோர் நடித்த திரைப்படங்களில் ஏராளமான நடிகர்கள் நடிகைகள் நடித்துள்ளனர் ரஜினிகாந்துடன் விஜயகாந்த் மட்டும் நடித்ததில்லை. மேலும் 1987 ஆம் வருடம் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் கலை ப் புலி எஸ்.தாணு தயாரிப்பில்  டி ராஜேந்திரன் இசையமைப்பில் உருவான படம் கூலிக்காரன் .இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் ரஜினிகாந்த் ரீமிக்ஸ் பாடத்தில்  நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கதை நடிகர் விஜயகாந்துக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறி மாற்றுப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.மேலும் நடிகர் விஜயகாந்த் உடன் இதுவரை எந்த படத்தில் நடிக்காத ரஜினிகாந்த் விஜயகாந்திற்காக நடிகர் ரஜினிகாந்த் கூலிக்காரன் என்ற திரைப்படதின் கதையினை தேர்வு செய்தார் 


மேலும்  நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமலஹாசன் மற்றும் பல்வேறு நடிகர்களுக்கு  பல்வேறு பட்டங்கள் இருந்து வந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் நடித்ததின் மூலம்  புரட்சிக்கலைஞர் என்ற பட்டத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வழங்கி சிறப்பித்தார்.

இதேபோல் நடிகர் விஜயகாந்த் கூலிக்காரன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக முதன்முதலாக விமானத்தில் சென்று படப்பிடிப்பில் ஈடுபட்டார்

மேலும் டி ராஜேந்திரன் இசையிலும் விஜயகாந்த் நடித்த திரைப்படமும் இந்த திரைப்படம் தான்


மேலும் கூலிக்காரன் திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் ரூபிணி ஜெய்சங்கர் எஸ் எஸ் சந்திரன்,பாண்டியன் ராதாரவி நாகேஷ் தியாகு மற்றும் பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்த இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு ரங்கன் , படத்தொகுப்பினை விட்டல் எஸ்.பி மோகன் ஆகியோர் நிகழ்த்திருந்தார்கள்

கூலிக்காரன் திரைப்படத்தில்  விஜயகாந்த் நடித்ததால் புரட்சிக் கலைஞர் என்ற பட்டமும் நடிகர் டி ராஜேந்திரன் இசையில் நடித்த திரைப்படமாகவும் திரைப்படத்தின் நடிப்பதற்காக முதன்முதலாக வான்வெளி பயணமும் மேற்கொண்டது இந்த திரைப்படத்தில் வாய்ப்புகள் இருந்தது


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.