Type Here to Get Search Results !

108 ஆம்புலன்ஸ் ல் வேலை வேண்டுமா ? ஜன 10ல் நேர்முகத் தேர்வு

108 ஆம்புலன்ஸ் ல்  வேலை வேண்டுமா ? ஜன 10ல் நேர்முகத் தேர்வு 


மத்திய மாநில அரசின் வேலைவாய்ப்பில் சேர வேண்டும் என்று இளைஞர்கள் பல்வேறு பயிற்சி தேர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் மத்திய மாநில அரசு வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நபர்கள் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த பணிகளிலும் சேர்வதற்காக முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் 108 ஆம்புலன்ஸ் வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நபர்கள் கீழ்கண்ட தகுதிகளை பெற்ற  நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
ஓட்டுனர் பணி

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணி அறிவிக்கப்பட்ட நிலையில் ஓட்டுநர் பணிக்காக சேர துடிக்கும் இளைஞர்கள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும்25 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்


.இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் குறைந்தபட்சம் மூன்று வருடத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்றும், பேஜ் லைசென்ஸ் எடுத்து குறைந்தபட்சம் ஒரு வருடம் முடிந்திருக்க வேண்டும் என்றும் போன்ற  தகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலையில் சேர வேண்டும் என்று உள்ள நபர்கள் குறைந்தபட்சம் 162.2 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத ஊதியம் மற்றும் பிற விபரங்கள்
டிரைவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 15820 மாத ஊதியமாக வழங்கப்படும் என்றும்,பத்து நாட்களுக்கு முறையான பயிற்சியும் தங்கும் இடமும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மருத்துவ உதவியாளர்
மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் மத்திய மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ,பிஎஸ்சி நர்சிங் ஏ என் எம், ஜி என் எம் , டி.எம். எல்.டி ஆகிய படிப்புகளில் பிளஸ் டூ தேர்ச்சிக்கு பின் முறையாக படித்து முடித்திருக்க வேண்டும்.

அல்லது மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிஎஸ்சி விலங்கியல் ,பயோ கெமிஸ்ட்ரி தாவரவியல்,பயோ டெக்னாலஜி நுண்ணியிரியல் ஆகிய படிப்புகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்
ரூ 16080
வயது
19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
மேலும் தேர்வானவர்களுக்கு 50 நாட்கள் மருத்துவமனை பயிற்சிகளும் ஆம்புலன்ஸ் நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும் ,இந்தப் பணியிடங்கள் சம்பந்தமாக கூடுதல் விபரங்களுக்கு 044 - 288 88 060 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என்றும்,
தேர்வு நடைபெறும் நாள் நடைபெறும் இடம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி மாதம் பத்தாம் தேதி அன்று நேர்முகத் தேர்வு செய்யப்படும் என்றும் ,தேனி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.