Type Here to Get Search Results !

தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தேனி  உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு  கனமழைக்கு வாய்ப்பு 


அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று ( 6 - 1-2024)  அதேபோல் 7-ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளிலும் லேசான முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என்றும்,
6 - 1 -  2024 சனிக்கிழமை நீலகிரி , கோவை , திண்டுக்கல் , திருப்பூர் ,தேனி, மதுரை , விருதுநகர், தென்காசி , கன்னியாகுமாரி , தூத்துக்குடி , நெல்லை மாவட்டத்திலும் ,ஏழாம் தேதி அன்று  திருவாரூர்,நாகப்பட்டினம்


உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையும் ஆங்காங்கே  சாரல் மழையும் பெய்யக்கூடும் என்றும் ,சென்னை, காஞ்சிபுரம் , திருவண்ணாமலை , ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை  மற்றும் அதனை சுற்றி உள்ள  பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை  பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ,சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.