Type Here to Get Search Results !

பேருந்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டியை பாதியில் இறக்கி விட்டதால் பரபரப்பு நடந்தது என்ன?

பேருந்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டியை பாதியில் இறக்கி விட்டதால் பரபரப்பு நடந்தது என்ன?


தர்மபுரி மாவட்டம் அரூர்  அருகே நவலை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலை வயது 59.இவர் மாட்டிறைச்சி விற்பனை தொழில் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் .இந்நிலையில் தனது கிராமமான நவலைகிராமத்தில் இருந்து அரூர் நகரத்திலிருந்து தினசரி சென்று மாட்டிறைச்சி வாங்கிக்கொண்டு நவலை கிராமத்துக்கு வந்து மாட்டு இறைச்சியினை விற்பனை செய்வது வரவது வழக்கமாக இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வழக்கம் போல் அரசு பேருந்தில் மாட்டு இறைச்சி வாங்குக் கொண்டு நவலைக்கு சென்றுள்ளார். இதில் பேருந்து நடத்தினார் ரகு என்பவர் எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறாய் மாட்டு இறைச்சியுடன் பேருந்தில் ஏறக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது .


மேலும் பேருந்து பாதி தூரம் சென்றவுடன் கீழே இறக்கி விட்டதாகவும் தெரிகிறது இதனால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டும்இல்லாமல் சமூக வலைதளங்களிலும் பரவியது இந்த சம்பவம் குறித்து தர்மபுரி போக்குவரத்து நிர்வாகம் சார்பில் நடத்துனர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமாரை தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்து செய்ய உத்தரவிட்டு உள்ளதாக தெரிகிறது .மேலும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பதினால் பேருந்து நடத்துனர் மற்றும் டிரைவர் மீது தகுந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருவதாக தெரிகிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.