Type Here to Get Search Results !

உணவை அதிகமாக வீணாக்கும் டாப் 10 நாடுகள் எவை?

உணவை அதிகமாக வீணாக்கும் டாப் 10 நாடுகள் எவை?


எந்த ஒரு மனிதனுக்கும் அடிப்படை என்பது உணவு என்று சொல்லலாம் . உணவு இல்லாமல் யாரும் வாழ முடியாது .மேலும் ஒரு சிலர் ஆடம்பரத்துக்காக உணவினை அதிக அளவு பல்வேறு விதமான வகைகளும் சமைத்து வீணாக்கி வருகின்றனர். அதேபோல் உணவு இல்லாமல் பல்வேறு நாடுகளில் பட்டினியால் வாடும் நபர்கள் அதிக அளவு இன்று வரை இருந்து வருகின்றனர்.

பல்வேறு நாடுகளில் பட்டினிஅதிகரித்து வரும் நிலையில் உணவினை தேவையில்லாமல் வீணாக்கும் நாடுகளும் உள்ளன என்றும், அதில் எந்த நாடு அதிகமாக வீணாக்கிறது என்பதனை முதல் 10 இடங்களை பிடிக்கும் நாடுகளைப் பற்றி பார்க்கலாம்


சீனா 

சீனா என்பது உலகில் வளர்ந்துள்ள நாடாக திகழ்கிறது .இந்த நாட்டில் தான் அதிக அளவு உணவு வீணாகும் நாட்டில் முதல் இடம் பிடிக்கிறது

உணவு தேவையின் மொத்த வீணாகும் உணவானது 91 மில்லியன் டன் என்று கூறப்படுகிறது

இந்தியா 

நம்முடைய இந்திய நாடு ஆனது உணவு வீணாகும் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது அதாவது உணவு வீணாக்கும் பட்டியலில் 68 மில்லியன் டன்களை தாண்டி உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா

உணவு கழிவுகளில் அதிகமாக வீணாக்கும் நாடுகளில் மூன்றாம் இடத்தினை அமெரிக்கா பெற்றுள்ளது.இந்த நாட்டின் உணவு வீணாகும் விதத்தில் 19 மில்லியன் டன்னை தாண்டி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான்

அறிவியல் நுட்பமாக பல்வேறு செயல்பாடுகளை தாண்டி செயல்பட்டு வரும் ஜப்பான் அதிக மக்கள் தொகை நாடாக கருதப்படுகிறது. இந்த நாட்டில் உணவு கழிவுகளில் 8 மில்லியன் டன் உணவு அதிகமாக வீணாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜெர்மனி 

உணவு வீணாக்கும் நாடுகளில் அடுத்த இடம் பிடிப்பது ஜெர்மனி இங்கு 6மில்லியன் டன்களில் உணவு வீணக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரான்ஸ் 

உணவு வீணாக்கும் நாடுகளின் மிக முக்கியமாக அடுத்த இடத்தில் இடம்பெறுவது பிரான்ஸ் இங்கு ஐந்து மில்லியன் டன்கள் உணவுகள் வீணாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து 

இங்கிலாந்து மிகப் பெரிய நாடாக இருந்து வரும் நிலையில் உணவு வீணாக்கும் நாடுகளில் 5 மில்லியன் டன் உணவு வீணாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

ரஷ்யா 

உணவு வீணாக்கும் நாடுகளில் ரஷ்யா அடுத்த இடத்தை இடம் பெற்றுள்ளது அதாவது நான்கு மில்லியன் டன்கள் உணவு வீணாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஸ்பெயின்

உணவு வீணாக்கும் நாடுகளில் அடுத்த இடம் பிடிப்பது ஸ்பெயின் இங்கு மூன்று மில்லியன் டன்கள் உணவு வீணாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியா

உணவு வீணாக்கப்படும் நாடுகளில் ஆஸ்திரேலியா அடுத்த இடத்தினை பெற்றுள்ளது இங்கு இரண்டு மில்லியன் டன் உணவு வீணாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


ஊட்டசத்து குறைபாடு உள்ள நாடுகள்

கொரியாஜனநாயக மக்கள் குடியரசு பகுதிகளில் அதிகமாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது


மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் அதிக அளவு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது

வைப்பீரியா 

லைப்ரியா நாட்டில் ஊட்டச்சத்தை குறைபாடு 38 சதவீதத்திற்கு மேல் உள்ளது


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.