Type Here to Get Search Results !

மாணவர்கள் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

 மாணவர்கள் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.


மத்திய மாநில அரசு சார்பில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அரசு பள்ளியில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கிட செய்யும் புதிய அறிவிப்பினை தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த செய்தி தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் நா லதா வெளியிட்ட செய்தி குறிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது என்றும் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும் தற்போது நடைபெறையில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் மொத்தம் ஆயிர நபர்களில் மாணவர்கள் ஐநூறு நபர்களும் மாணவிகள் 500 நபர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும்


அவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் ஒரு கல்வியாண்டில் ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ,இந்த தேர்வில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்றும் இந்த தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும் என்றும் ,முதல் தாளில் கணிதம் தொடர்பான 60 வினாக்களும் இரண்டாவது நாளில் அறிவியல் சமூக அறிவியல் தொடர்பான 60 வினாக்களும் ,கேட்கப்படும் என்றும் முதல் தாள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என்றும் இரண்டாவது தாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் விண்ணப்ப படிவத்தினை

https://www.dge.tn.gov.in/

 என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூபாய் 50 சேர்த்து தங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் டிசம்பர் 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.