கற்றாழையை வீட்டின் நுழைவு வாயில் வைக்கலாமா ? நன்மைகள் என்ன?
நம் முன்னோர்கள் முதல் தற்பொழுது உள்ள இளைஞர்கள் வரை ஒரு செயலை செய்வதற்கு வாஸ்து சாஸ்திரங்கள் பார்த்து அந்த செயலினை செய்து வருகிறார்கள். அதேபோல் நம் வீடுகளில் ஒரு சில செடிகளை வைப்பதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதை பார்க்கும் முன் கற்றாழை போன்ற தாவரங்களை நம் வீடுகளிலும் அலுவலகத்திலும் வைப்பதனால் நன்மைகள் ஏற்படுகிறதா அல்லது தீமைகள் ஏற்படுகிறதா என்பதனை காணலாம்.
கற்றாழை நம் மன்னர்களின் முதல் தற்போது வரை மங்களகரமான பொருளாக கற்றாழையை பார்க்கப்படுகிறது அதனால் கற்றாழைக்கு அதிர்ஷ்ட தரும் செயலை ஈர்க்கும் தன்மை உடையது என்றும் கூறப்படுகிறது .அதே போல் கற்றாழையானது நம் வீட்டில் வைப்பதனால் காற்றில் உள்ள அசுத்தத்தை போக்கி சுத்தமான காற்றை வெளிப்படுத்தும் தன்மை உடையது என்றும் கூறப்படுகிறது. எதிர்மறையான தாக்கங்களுக்கும் பாதுகாப்போடு இருப்பதற்கும் இந்த கற்றாழை பயன்படுகிறது. நமக்கு ஏற்படும் பல்வேறு தடைகளையும் இந்த கற்றாழை நம் வீட்டில் நுழைவாயிலில் வைப்பதினால் நீக்கிறது என்றும் சொல்லப்படுகிறது .அதைப்போல் கற்றாழையினை நம் வீட்டில் வளர்ப்பதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி பல்வேறு புதிய உறவுகளை வளர்க்கும் தன்மை உடையது .மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலையில் இருக்கும் போது கட்டுப்படுத்தும் பொருளாகவும் கற்றாழை பயன்படுகிறது. கற்றாழை நாம் வீட்டில் வளர்ப்பதினால் அந்த இடத்தில் வசிக்கும் நபர்களுக்கு சீரான சிந்தனை தெளிவும் சரியான முடிவு எடுக்கும் திறனும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் நம் வாழ்க்கையில் தொடர்ச்சியான வளர்ச்சியையும் இந்த கற்றாழை இருப்பதினால் கிடைக்கும் என்றும், கற்றாழையானது பசுமையாக காணப்படுவதால் வீட்டின் அழகான தோற்றத்தை உருவாக்கி நம் வீட்டுக்கு வருகை புரியும் விருந்தினர்களையும் வரவேற்கும் விதமாக கவர்கிறது.
கற்றாழை செடியினை வைக்கும் முறை
வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழை செடியை நுழைவாயிலில் வைக்கும் பொழுது அது வடக்கு கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும் அதேபோல் இந்த கற்றாழை நாம் நன்கு பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி