Type Here to Get Search Results !

ஆவணி அவிட்டத்தில் தீபம் ஏற்றி வணங்கினால் இவ்வளவு நன்மைகளா

ஆவணி அவிட்டத்தில் தீபம் ஏற்றி வணங்கினால் இவ்வளவு  நன்மைகளா



தமிழகத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு சாஸ்திரங்கள் செய்யப்பட்டு வருகிறது.ஒவ்வொரு சாஸ்திரங்களும் ஒவ்வொரு கருத்தினை சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவணி அவிட்டத்தில் எந்த மாதிரியான செயல்களை செய்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரைகளில் காணலாம்.



அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் திருக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மற்ற நாட்கள் நம் வழிபாடு செய்யும் பலனை விட அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் நமக்கு அதிக பலன்கள் தரும் என்றும் சொல்லப்படுகிறது.


இந்நிலையில் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியானது அவிட்டம் நட்சத்திரத்தோடு வருவதினால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது

மேலும் ஆவணி அவிட்டத்தில் எந்த ஒரு பொருட்கள் வாங்கினாலும் செல்வம் பெருகும் என்றும் கூறப்படுகிறது

 ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றுவது மிகச் சிறந்த நாளாக கருதப்பட்டு வருகிறது. மேலும் உமா மகேஸ்வரி  சுவாமியினை  மஞ்சள் பாக்கு  பழம் வைத்து வழிபட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது 



குழந்தைகள் கல்வி ஞானம் பெருக ஹயக்கிரிவா சுவாமி வழிபாடு செய்ய வேண்டும்.மேலும் குழந்தைகள் படிப்பு சம்பந்தமாக எந்த ஒரு பொருளை வாங்கினாலும் கல்வி சம்பந்தமான அனைத்து பலன்களும் கிடைக்கும் என்றும் 'மகாலட்சுமி பூஜை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்றும்,அதேபோல் நெல்லு மணிகள் நம் கடையில் வாங்கி வீட்டில் சேர்ப்பதனால் செல்வமும் அதிக அளவு அதிகரிக்க கூடும் என்றும் 'அந்த நெல் மணிகளை ஒரு தட்டில் வைத்து இரண்டு அகழ்விளக்கு தீபங்கள் லட்சுமி அன்னபூரணிக்கு ஏற்றி வழங்கினால் வற்றாத செல்வமும் பெருகும் என்றும் கூறப்படுகிறது 

பூணூல் மாற்றும் முறை 

பூணூலை மாற்ற நினைக்கும் நபர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நீர் நிலைகள் உள்ள கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் மந்திரம் கூற பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை மாற்றிக் கொள்ளலாம்.


இந்த வருடம் ஆவணி அவிட்டம் ஆனது புதன்கிழமை வருவதால் 30 தேதி இரவு ஒன்பது முப்பது மணி வரை ஆவணி அவிட்டம் நட்சத்திரம் உள்ளது.மேலும் அதிகாலை 7.15  மணிக்கு முன்பாக பூணூல் அணிவித்தல் நல்லது. இந்த நேரத்தினை விட்டால் காலை 9-15  முதல் 10-15 வரை  உள்ள நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது

ஆவணி அவிட்டத்தில் தங்கம் வெள்ளி மரகதம் என்று அதிகளவு பொருட்செலவு உள்ள பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாமல் இருந்தால் நெல்மணிகள்  வாங்கி தரிசனம் செய்தால் செல்வம் பெருகும் என்றும் கூறப்படுகிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.